⚖️ ஜோன்ஸ்டன் மற்றும்  மகன்கள் உள்ளிட்டோாின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  BMW சொகுசு காரை சட்டவிரோதமாக வைத்திருந்த விவகாரம் மற்றும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 9, 2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது . ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத சொகுசு காரை பயன்படுத்தியது.,
அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டமை, வருமானத்திற்கு மேலதிகமாக சொத்து சேர்த்தமை போன்ற குற்றச்சாட்டுகள் மீதே இந்த நடவடிக்ரைக எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாலும், சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாலும் பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலையில், கடந்த கால ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான பிடி இறுக்கப்பட்டு வருகிறது. இவரைத் தவிர மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Tag Words: #JohnstonFernando #SriLankaNews #BreakingNewsSL #CourtOrder #RemandExtended #LKA #AntiCorruption #LegalUpdate

The post ⚖️ ஜோன்ஸ்டன் மற்றும்  மகன்கள் உள்ளிட்டோாின் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply