10
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரபல பயண முகவர் நிறுவனமான Regen Central Ltd, திடீரென தனது வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு கலைப்பு (Liquidation) நிலைக்குச் சென்றுள்ளது. ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணப் பொதிகளை (Package Holidays) விற்பனை செய்து வந்த இந்நிறுவனத்தின் வீழ்ச்சி, பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஹார்ட்ஃபோர்ட்ஷயரில் (Hertfordshire) தொடங்கப்பட்ட இந்நிறுவனம், சுமார் 15 ஆண்டுகாலச் சேவையின் பின்னர் தற்போது நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் One Haji and Umrah, Regen Travels, மற்றும் Oneworld Travels ஆகிய பெயர்களிலும் தனது சேவைகளை வழங்கி வந்தது.
இத்தாலி, பாலி (Bali), தாய்லாந்து, துபாய் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான சுற்றுலா மற்றும் புனிதப் பயணப் பொதிகளை இந்நிறுவனம் வழங்கியிருந்தது.
குறிப்பாக ‘One Haji and Umrah’ பெயரில் புனிதப் பயணங்களை (Hajj/Umrah) முன்பதிவு செய்திருந்தவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகலாம் என அஞ்சப்படுகிறது.
நிறுவனம் தனது வர்த்தகத்தை நிறுத்தியுள்ளதால், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களது பணம் அல்லது பயணத்தின் நிலை குறித்துத் தவிக்கின்றனர்.
இந்நிறுவனம் ATOL அல்லது ABTA பாதுகாப்பைக் கொண்டிருந்ததா என்பதைச் சரிபார்த்து, அதன் மூலம் இழப்பீடுகளைக் கோருவதற்குப் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tag Words: #RegenCentral #TravelNewsUK #OneworldTravels #HajjAndUmrah #HolidayCollapse #UKBusinessNews #TravelIndustry #Liquidation2026
