🏏 இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’ மலிங்கா!

டி20 உலககோப்பை 2026 -இலங்கை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியைத் தயார் செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆடவர் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக (Consultant – Fast Bowling Coach). டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி 25, 2026 வரை ஒரு மாத காலத்திற்கு அவர் இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது ஒரு குறுகிய கால நியமனமாகும். குறிப்பாக ‘டெத் ஓவர்களில்’ (Death Bowling) பந்து வீசுவதில் தனது அபார அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களின் திறனை மேம்படுத்துவதே மலிங்காவின் முக்கிய பணியாகும்.

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் போதும் மலிங்கா அணியுடன் இணைந்து பணியாற்றுவார்.

2026 டி20 உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது போட்டி பெப்ரவரி 07ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறும்.

பிப்ரவரி 08 ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கையின் முதல் போட்டி இடம்பெறவுள்ளது.

‘குழு B’ யில் இலங்கை ,அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

மலிங்காவுடன் சேர்த்து, இந்தியாவைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதர் (R. Sridhar) அவர்கள் உலகக் கிண்ணத் தொடர் முடியும் வரை இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்சியாளராக (Fielding Coach) நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

🏆 2026 டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியின் முழு விபரங்கள்

இந்த உலகக் கிண்ணத் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறவுள்ளது. இலங்கை அணி தனது குழுநிலை (Group Stage) போட்டிகள் அனைத்தையும் சொந்த மண்ணிலேயே விளையாடவுள்ளது.

Tag Words: #LasithMalinga #SriLankaCricket #T20WorldCup2026 #SLC #CricketCoaching #Malinga #FastBowling #Lions #TamilCricketNews

நன்றி

Leave a Reply