38
புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (பெப்ரவரி 27) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் அதிகாலை முதலே பல நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்து வருகின்றனர்.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணத்தைத் திட்டமிடும் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகத் துறைமுகத்தைச் சென்றடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

#Katchatheevu #StAnthonyFestival #Jaffna #Kurikadduwan #Pilgrimage #BoatService #SriLankaNews #NorthernProvince #TravelUpdate
