ஆயுதப் படைகளின் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அல் கார்ன்ஸ் இங்கிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்து அரசாங்கம் இராணுவத்திற்காகப் போதுமான பணத்தைச் செலவிடவில்லை என்றும், தவறான ஆயுதங்களுக்காகப் பணத்தைச் செலவிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இங்கிலாந்தின் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மத்தியில், பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலியின் இராஜினாமாவைத் தொடர்ந்து, ஆயுதப் படைகளின் அமைச்சர் அல் கார்ன்ஸ் நேற்றிரவு அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்தார்.
இராணுவத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததாலும், அரசாங்கம் தனது பணத்தை காலாவதியான திட்டங்களில் செலவிடத் திட்டமிட்டதாலும் தாம் ஆயுதப் படைகள் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் இன்று தெரிவித்தார்.
மேலும், வரும் வாரங்களில் தொழிலாளர் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டி அறிவிக்கப்பட்டால், தாம் அப்பதவிக்கு போட்டியிடுவேன் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
