இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய முஸ்லிம்கள் – அமைச்சர் விஜித்த ஹேரத்

வெள்ளம் மற்றும் சூறாவளி நிலையின்போது, மாத்தறை மற்றும் காலியிலிருந்து வந்த முஸ்லிம் இளைஞர் குழுக்கள், தமக்கு அறிமுகமில்லாத பதுளை மற்றும் மல்வானை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று, தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளை வழங்கியதன் மூலம், இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்தை சமூகத்திற்கு நடைமுறையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது

2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாறான எந்தவொரு இனவாதம் அல்லது மதவாத மோதல்களுக்கு இடமில்லை என அமைச்சர் விஜத்த ஹேரத் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் (28) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது. அதில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply