ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பயணியர் பஸ், மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்ததுடன் 30 பயணியர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் ராம் நகரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணியருடன் உதம்பூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த பேருந்து ராம்நகருக்கு உட்பட்ட மலைக் கிராமமான அருகே கட்டுப்பாட்டை இழந்துமலையில் இருந்து உருண்டு, 320 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில், அந்த பேருந்தில் பயணித்த 22 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அதே மலைப் பாதையில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள், மீட்புப் பணிக்கு விரைந்து வந்தனர்.

நன்றி

Leave a Reply