அம்பாறை வைத்தியசாலையின் வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த பெண் தனது காதலனுடன் கனடா செல்லும் நோக்கத்தில், வட்டிக்கு மற்றும் சில நபர்களிடமிருந்தும், வங்கியிலிருந்தும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனாகப் பெற்று காதலனிடம் கொடுத்துள்ளார்.
இருப்பினும், இதுவரை வெளிநாடு செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்காத பின்னணியில், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளில், பெண்ணின் உடலைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கார், அவரது காதலனின் அம்பாறை பகுதியைச் சேர்ந்த மற்றொரு காதலிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

