39
மன்னார், பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் தாய் மற்றும் அவரது 10 மாதக் குழந்தை ஆகிய இருவரும் மட்டக்களப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக நேற்று (2026 மே 08, வெள்ளிக்கிழமை) அடம்பன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவருடன் மட்டக்களப்பிற்குச் சென்ற நிலையில், மகள் மற்றும் பேரப்பிள்ளை குறித்துத் தகவல் ஏதுமின்றித் தவிப்பதாகக் காணாமல் போன பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.
பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் றெ யாழினி (18) மற்றும் அவரது 10 மாதக் குழந்தை ஆகியோரே காணாமல் போயுள்ளனா். கடந்த பெப்ரவரி 2-ஆம் திகதி (02/05/2026) யாழினியின் கணவர், தனது தாய்க்கு உடல்நலக் குறைவு எனக் கூறி யாழினியையும் குழந்தையையும் மன்னாரிலிருந்து மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மன்னாரிலிருந்து வவுனியா சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்குச் செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர்
யாழினியின் கணவர் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், யாழினியும் குழந்தையும் அங்கு செல்லவில்லை. மருமகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, மகள் மற்றும் பேரப்பிள்ளை குறித்து அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பதாகத் தாய் குற்றம் சுமத்தியுள்ளார். மகள் மற்றும் பேரப்பிள்ளைக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாத நிலையில், அடம்பன் காவற்துறையினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
யாழினி மற்றும் அவரது 10 மாதக் குழந்தை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 077-5841705, 077-6902536 ஆகிய இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள காவற்துறை நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#MissingPerson #MannarNews #Batticaloa #AdampanPolice #YoungMotherMissing
