60
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் இன்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொரளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளை பொரளை காவல்துறையினா், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
நேற்று (27) காலை மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பாக முன்னதாக ஒரு ஜெயிலர் மற்றும் இரண்டு சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
#Colombo #PrisonDeath #MagazinePrison #SriLanka #CustodialDeath #PoliceInvestigation #CrimeNews #Arrests #HumanRights
