லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – Sri Lanka Tamil News

தமிழ் – சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு  விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

தமிழ் – சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு  விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு  நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கையிருப்பில் உள்ள 5000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இன்று சந்தைக்கு அனுப்ப்படும் என லாப்ஸ் (Laugfs) அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ  (Litro) நிறுவனமும்,  விநியோகப் பணிகள் இன்று முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், மே மாதம் வரை தேவையான அளவுக்கு  கையிருப்பு தற்போது உள்ளதாகவும் சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடரும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply