வல்வெட்டித்துறையில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

 

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை கஞ்சாவும் , சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றினையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினா்   முன்னெடுத்து வருகின்றனர்.

#Jaffna #Valvettithurai #SriLankaNews #Arrest #PoliceRaid #CrimeNews #IllegalWeapon #PistolSeized #DrugBust

நன்றி

Leave a Reply