இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

பெரிய​பாளை​யம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்​தும் தனி​யார் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 15 பேர் உயி​ரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் தொழிலா​ளர் நேற்று உயி​ரிழந்தார்.

இதனால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வரும் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த 21-ம் திகதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இதில், ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த 12 பெண்​கள், அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த 2 பெண்​கள், ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த ஒரு பெண் என, 15 பெண் தொழிலா​ளர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த மற்றுமொரு பெண் நேற்று உயி​ரிழந்​தார்.

இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது.

நன்றி

Leave a Reply