குவைத் அரசு Tv செய்தி வாசிப்பாளருக்கு சிறை

குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான ஷைனப் தஸ்தி என்பவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஈரானுக்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். ஈரானுக்கு ஆதரவான இவருடைய இந்தப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறிய இந்த வழக்கில், ஈரானுக்கு ஆதரவாகக் கருத்துப் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply