71
குவைத் சா்வதேச விமான நிலையம் மீது இன்று (28) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் பயன்படுத்தும் முக்கியமான விமான நிலையத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான இந்த விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால், அங்குள்ள ரேடார் (Radar) கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமானப் போக்குவரத்திலும் தற்காலிக பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னால் யார் இருப்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Kuwait Airport #Drone Attack #Radar Damage #Kuwait News #KUNA (Kuwait News Agency) #Abdullah Al-Rajhi #International Aviation
