சிறுமி ஒருவரைக் பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி, சந்தேக நபர் ஜூன் 16ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நேரில் சென்று தனது இரத்த மாதிரியை வழங்க வேண்டும். நித்தம்புவ பொலிஸார் சமர்ப்பித்த கூடுதல் அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, தேரர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

