பிரித்தானிய பிரதமர்  பதவி விலகுவதாக அறிவிப்பு!

பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Labour Party) தலைவர் பதவிகளில் இருந்து விலகுவதாக கீர் ஸ்டார்மர் (Keir Starmer) இன்று (2026 ஜூன் 22 ஆம் திகதி) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் வெற்றியுடன் ஆட்சியமைத்த அவர், இரண்டு ஆண்டுகளுக்குள் தனது பதவியை tpyFk; நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக அவரது அரசாங்கத்தின் செல்வாக்கு சரிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து உருவான கடுமையான அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பெற்ற பெரும் வெற்றியே இந்த அரசியல் மாற்றத்திற்கான உடனடித் தூண்டுகோலாக அமைந்தது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்சி உள்கட்டமைப்புத் தேர்தல் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை கீர் ஸ்டார்மர் தற்காலிகப் பிரதமராகப் (Caretaker Prime Minister) பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிவிலகலின் மூலம், பிரித்தானியாவில் கடந்த பத்தாண்டுகளில் பதவிக்காலத்திற்கு முன்பாகவே விலகும் ஆறாவது பிரதமர் என்ற நிலையை கீர் ஸ்டார்மர் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply