யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள்

 

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும்  கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டி. எஸ். சூசைதாசன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ அலெக்ஸ் ராஜா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.  எதிர்வரும் 22 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply