இலங்கைக்கு எதிரான முதலாவது டி:20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. ஜமைக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் […]
