கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய! – Athavan News புதிய பொலிஸ்மா அதிபராக, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்…
Category: இலங்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை முன்னேற வேண்டும் – ஐ.நா
சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு வழங்கும் போக்கிலிருந்து விடுபடவும், மாற்றத்துக்கான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கும் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாய்ப்பைப்…
"பிரதமர் ஹரிணி பெரும் சொத்தாகும்"
நாங்கள் மிக அன்புடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வேலை செய்கின்றோம், அவர் எமக்கு அரசியலில் கிடைத்த பெரும் சொத்தாகும். எமது அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. சஜித், நாமல் ஆகியோர் அழுது கொண்டு இருக்க வேண்டியதுதான், குறித்த 5 வருடங்களை சரியாக…
கைவிடப்பட்டிருந்த மீனவர் ஓய்வூதிய திட்டம் மீள ஆரம்பம்
கைவிடப்பட்டிருந்த மீனவர் ஓய்வூதிய திட்டம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படுமெனகமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. தகுதியானவர்களை அடையாளங்காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆரச்சி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை விவசாய அமைச்சு…
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு சுகாதார மருத்துவத் திட்டம் ஆரம்பம்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது அவர்களுக்கான தனி மனித உரிமை என சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு சுகாதார மருத்துவத் திட்ட நிகழ்வில் கலந்து…
காசோலைகளை வழங்கி மக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த தம்பதி
பெறப்பட்ட பணத்தை திருப்பித் தராமல் வெற்று காசோலைகளை வழங்கி மக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக CID அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்…
ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து
3 யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலகி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள…
சந்நிதி ஆலயத்திற்கு வழிபட சென்ற பெண்ணே கடல்நீரேரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
4 செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வழிபட சென்ற பெண்ணே மாலை ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாற்று கடல்நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த இராஜலிங்கம் சுபாஷினி (வயது 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்…
கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்விக்கான, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக…
கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை முழுமையாக செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் ஆகியோருடன் அமைச்சின்…
