பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு! – Athavan News

கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti)  மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோர் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், குறித்த ஹெலிகொப்டர் விபத்து இடம் பெறுவதற்கு  முன்னர்  ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply