பிரான்ஸ், லண்டனை இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை முன்னிட்டு அவசரத் தயாரிப்புகளை அதிகரித்துள்ளது. லண்டனில் உள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரிகள், நகரத்தில் பெரிய அளவிலான சம்பவம் ஒன்று இடம்பெற்றால் எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பாக “அவசரநிலை மேலாண்மை” பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தொடர்பான ஈரான் நிலைமையைச் சுற்றியுள்ள பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவசரத் திட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, Metropolitan Police தெரிவித்ததாவது, MI5 மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகள் இணைந்து கடந்த ஒரு ஆண்டில் லண்டன் நகரத்தில் 20-க்கும் மேற்பட்ட ஈரான் ஆதரவு பயங்கரவாத சதித் திட்டங்களை தடுத்துள்ளதாகும். அவற்றில் சிலர் மீது கொலை முயற்சிகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
#France #London #TerrorThreat #BreakingNews #WorldNews #Iran #DonaldTrump #MI5 #UKSecurity
The post பாதுகாப்பு வளையத்திற்குள் லண்டன்: ஈரான் ஆதரவு சதித்திட்டங்களை முறியடிக்க பிரான்ஸ் தூதரகம் விசேட நடவடிக்கை! appeared first on Global Tamil News.
