மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஒரு வாரம் வெசக் வாரமாக பிரகடனம் செய்யப்பட்ட போதும், 30 பெளர்ணமி (போயா) தினம், 31 மற்றும் ஜூன் 1 திகதிகளில் மாத்திரமே இறைச்சிக்காக விலங்குகளை அறுத்தல், இறைச்சிக் கடைகளை திறத்தல், மதுபான சாலைகளை திறத்தல், குதிரை பந்தய, கசினோ சூதாட்ட நிலையையங்களை திறத்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை ஊராட்சி அமைச்சு (07.05.2026) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தத்தமது பிரதேச உள்ளூராட்சி நிறுவனங்களிடம் முறையாக அனுமதிகளைப் பெற்று 28 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாயின் அன்றும் மறுநாள் 29 அய்யாமுத் தஷ்ரீக் முதலாம் நாளும் உழ்ஹிய்யா கிரியையினை நிறைவேற்றிக் கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்.
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 08.05.2026 See less

