சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 நபர்கள் பல நாடுகளில் பதுங்கல்


சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 நபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாகஅமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

அவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள். அந்த 96 பேரில் 37 பேர் வெளிநாடுகளில் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 19 பேர், இந்தியாவில் 11, மலேசியாவில் 1, ஐக்கிய இராச்சியத்தில் 1, பிரான்சில் 1, கனடாவில் 1, ரஷ்யாவில் 1, இத்தாலியில் 1 மற்றும் சவுதி அரேபியாவில் 1 என 37 பேர் இனங்காணப்பட்டு, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply