தமிழக முதல்வராக பதவி யேற்ற ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம், அத்துறைகள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, காவல் துறையுடன் பெண்கள், இளைஞர், குழந்தைகள் நலன் ஆகிய துறைகளை, முதல்வர் விஜய், தன் வசம் வைத்துக் கொண்டார். அதுமட்டுமல்லாது, மகளிர் உரிமைத்தொகை போன்று, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் […]
