51
வடக்கு கிழக்கு தமிழர்களின் கட்சிகள் அதிகரித்து விட்டன. அதனை ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி தம்மிடம் வலியுறுத்தினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
கட்சிகள் அதிகரித்து விட்டன. ஓரளவுக்கு இதனை ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், எனதும் சிறீதரனதும் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.ஆழமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு கட்சிகள் உருவாகி விட்டது. மாவட்டத்துக்கு மாவட்டம், மாகாணத்துக்கு மாகாணம் என ஒவ்வொரு கட்சிகள் உருவாகிவிட்டது. அவர்களுக்கு எத்தனை கட்சி இருக்கு என உண்மையில் தெரியாது.
இது ஆரோக்கியமானது அல்ல என்பதை அனுபவம் உள்ள அரசியல் ஞானம் உள்ள ஒரு பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சரவை உறுப்பினராக இருந்த ஒருவரின் வாயிலிருந்து வருகிறது என்று சொன்னால் அதில் நாங்கள் அவதானமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர் கூறிய கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் சந்திப்பு மிக ஆரோக்கியமானது. எமது கருத்துக்களை சொல்லக்கூடியதாக இருந்தது.
நமது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய தமிழன் என்று வகையில் அவரது அனுபவம் நன்றாக இருந்தது. அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல மாகாண சபை தேர்தல் சம்பந்தமாகவும் நாம் தெரிவித்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்து பதவியில் இருந்து கொண்டு இருக்கிறேன் ஆகவே அந்த அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தெரிவித்தேன். அதை அவர் ஜனாதிபதியோடு பேசியதாகவும் சொல்லியிருக்கிறார். தெளிவாக சமஸ்டியை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம் – என்றார்.
#TamilPolitics #ITAK #CVKSivagnanam #IndiaSriLanka #IndianVicePresident #Radhakrishnan
