கொட்டகலை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில், வாழை மரத்தின் தண்டுப் பகுதிக்கு நடுவிலிருந்து வாழைக்குலை ஒன்று வெளிவந்துள்ளது.
வாழை மரத்தின் உச்சிப் பகுதியிலேயே வாழைக்குலை தோன்றுவது வழக்கம். ஆனால், இந்த மரத்தின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கு இடையில் இருந்து வாழைக்குலை வெளிவந்துள்ளது.
இந்த அதிசயப் பின்னணியைக் கொண்ட வாழைமரத்தை அப்பகுதி மக்கள் பலரும் ஆர்வத்துடன் நேரில் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தும் வருகின்றனர்.

