அருச்சுனாவுக்கு விளக்கமறியல்

 

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இளவாலை காவல்நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அருச்சுனா இராமநாதனை  அழைத்து , வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் , அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை ,மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அருச்சுனாவை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Arrest #Remand #SriLanka #Jaffna #MP #DrArjunanRemanded  #MallakamCourt

The post அருச்சுனாவுக்கு விளக்கமறியல் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply