கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தென்கோடி முனையான ‘இந்திரா பாயிண்ட்’ பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டேன். அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் குடியேறியவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை இத்துடன் பகிர்ந்துள்ளேன். நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தால் ‘ஐஎன்எஸ் பாஸ்’ […]
