யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 09 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதிகளை மீட்டு சோதனையிட்டனர். அதன் போது பொதிக்குள் சுமார் 09 கிலோ கிராம் கஞ்சா காணப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை காவல் நிலையம் எடுத்து சென்ற காவல்துறையினா் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Jaffna #Kodikamam #SriLankaNews #DrugBust #KeralaGanja #CannabisSeizure
The post கொடிகாமத்தில் 09 கிலோ கஞ்சா மீட்பு appeared first on Global Tamil News.
