ஜனாதிபதியின் ஆட்சியில் கிழக்குக்கு ஒரு சட்டம், மேற்கிற்கு ஒரு சட்டமா..?

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பு  குறித்து பேசவில்லை என இம்ரான் மகரூப் Mp கேள்வி எழுப்பியுள்ளார்.


இவரின் இந்தக் கருத்து அரசியல் நோக்கம் கொண்டது. மறைமுகமாக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களை குறைகூறும் நோக்கம் கொண்டது. உண்மையில் இந்தத்துறைமுகம் ஆய்வுகள் எதுவுமின்றி நிர்மாணிக்கப்பட்டது என்றால் கடந்த 2 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அவர் ஏன் இது குறித்து இதுவரை மாற்று நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை அல்லது இது குறித்து ஏன் முன்னர் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை என்று கேட்க விரும்புகிறேன். 


கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணமும் எவ்வித சுற்றாடல் ஆய்வுகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டது தான். இதனால் உஸ்வெட்டக் கெய்யாவ, வென்னப்புவ, நீர்கொழும்பு போன்ற பகுதிகள் அரிக்கப்படவதாக சூழலியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும், கடலின் அடியில் உள்ள வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஜனாதிபதி எங்காவது பேசியுள்ளாரா? ஜனாதிபதியின் ஆட்சியில் கிழக்குக்கு ஒரு சட்டம் மேற்கிற்கு ஒரு சட்டமா? 

நன்றி

Leave a Reply