தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று: 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு தீவிரம் – Lanka Truth | தமிழ்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர்.

மொத்தம் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் ஆவர்.

மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார், துணை இராணுவப்படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க போராடுகிறது. அதேவேளை எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி ஆட்சியை மீட்க முயற்சிக்கிறது. நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் பழைய கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க களமிறங்கியிருக்கின்றன.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி தமிழக அரசியல் வட்டாரம் காத்திருக்கிறது.


1

நன்றி

Leave a Reply