இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பலான ஐரிஸ் தேனா அமெரிக்கத் தாக்குதலை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும், சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் பயன்படுத்தும் எனஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினார்.
இந்த உரையாடலின் போது, ஐரிஸ் தேனா கப்பலை மீட்க இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஈரான் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
மேலும், கப்பல் குழுவினரும் பிற ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை ஈரானுக்கு அனுப்ப உதவியதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, ஐரிஸ் தேனா கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

