தமிழ்நாட்டில் வேலை! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 | 4,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் | சம்பளம்: ரூ.15,000 | டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்! Central Bank of India Apprentice Recruitment 2026

Central Bank of India Apprentice Recruitment 2026: வங்கித்துறையில் பணிபுரியக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள 4,500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 202 காலியிடங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்த புதிய பட்டதாரிகளுக்கு (Freshers) சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய இது ஒரு அருமையான பொன்னான வாய்ப்பாகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வரும் 22.06.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான தகவல்களைக் கீழே விரிவாகக் காணலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Central Bank of India
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
காலியிடங்கள் 4,500 இடங்கள்
பணிகள் அப்ரண்டிஸ் (Apprentice)
கல்வித் தகுதி (Education) ஏதேனும் ஒரு டிகிரி (2022 அல்லது அதற்குப் பிறகு முடித்தவர்கள்)
மாதச் சம்பளம் (Salary) ரூ. 15,000/- (தொகுப்பூதியம்)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு & உள்ளூர் மொழித் தேர்வு
கடைசி தேதி 22.06.2026
பணியிடம் தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.centralbankofindia.co.in/

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • அப்ரண்டிஸ் (Apprentice) – 4500 காலியிடங்கள்

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

மாநிலம் காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (UT) 01
ஆந்திரப் பிரதேசம் 128
அருணாச்சலப் பிரதேசம் 08
அசாம் 118
பீகார் 433
சண்டிகர் (UT) 09
சத்தீஸ்கர் 114
தாத்ரா & நகர் ஹவேலி 01
டாமன் & டியூ (UT) 01
டெல்லி 97
கோவா 28
குஜராத் 305
ஹரியானா 137
ஹிமாச்சலப் பிரதேசம் 55
ஜம்மு & காஷ்மீர் (UT) 13
ஜார்கண்ட் 87
கர்நாடகா 105
கேரளா 116
லடாக் (UT) 01
மத்தியப் பிரதேசம் 489
மகாராஷ்டிரா 586
மணிப்பூர் 07
மேகாலயா 08
மிசோரம் 01
நாகாலாந்து 07
ஒடிசா 103
புதுச்சேரி (UT) 02
பஞ்சாப் 142
ராஜஸ்தான் 70
சிக்கிம் 15
தமிழ்நாடு 202
தெலங்கானா 100
திரிபுரா 05
உத்தரப் பிரதேசம் 580
உத்தரகாண்ட் 401
மேற்கு வங்காளம் 315
மொத்தம் 4500

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்:

பதவியின் பெயர்(Post Name) கல்வித் தகுதி(Education Details)
அப்ரண்டிஸ் (Apprentice) விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Bachelor’s Degree / Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய நிபந்தனை: விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டப்படிப்பை 01.01.2022 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ (2022, 2023, 2024, 2025 & 2026) முடித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

பதவியின் பெயர்(Post Name) வயது வரம்பு(Age Limit)
அப்ரண்டிஸ் (Apprentice) விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைப்படி வயது தளர்வு (Age Relaxation):

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

  • SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் (33 வயது வரை விண்ணப்பிக்கலாம்)
  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள் (31 வயது வரை விண்ணப்பிக்கலாம்)
  • PwBD (பொது / EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 ஆம் ஆண்டிற்கான Specialist Officer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, பதவிகளுக்கான மாத சம்பள விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:

பதவியின் பெயர்(Post Name) மாதச் சம்பளம்(Salary)
அப்ரண்டிஸ் (Apprentice) ₹15,000/-

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய கட்டங்களின் அடிப்படையில் தகுதியின் படி தேர்வு செய்யப்படுவர்:

  • ஆன்லைன் தேர்வு (Online Examination): சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் பொதுவான தகுதித் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
  • உள்ளூர் மொழித் தேர்வு (Test of Local Language): விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் (தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்களுக்குத் தமிழ் மொழி) எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

Online Examination (Objective type) – Duration 60 minutes

Name of Test No. of Questions Max Marks
General/ Financial Awareness 20 20
Quantitative & Reasoning Aptitude 20 20
Computer Knowledge 20 20
General English 20 20
Central Bank of India Products & Services 20 20
Total 100 100

தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்:

  • தவறான பதில்களுக்கு Negative Mark இல்லை.
  • மாநில வாரியாக மற்றும் பிரிவு (Category) வாரியாக தகுதி பட்டியல் (Merit List) தயாரித்து தேர்வு செய்யப்படுவர்.
  • மதிப்பெண்கள் சமமாக இருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ஆன்லைன் தேர்வில் தகுதி பெறுபவர்கள் உள்ளூர் மொழித் தேர்வில் (Local Language Test) தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பில் அந்த உள்ளூர் மொழியை படித்திருந்தால், மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா விதிகளின்படி விண்ணப்பதாரர்கள் தங்களது பிரிவின்படி ஆன்லைன் மூலமாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்:

  • General / EWS / OBC (ஆண்கள்): ₹944/- (கட்டணம் + 18% GST)
  • General / EWS / OBC (பெண்கள்): ₹708/- (கட்டணம் + 18% GST)
  • SC / ST / PwBD / திருநங்கைகள்: ₹236/- (கட்டணம் + 18% GST)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2026

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.06.2026 முதல் 22.06.2026 தேதிக்குள் https://centralbank.bank.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:

  1. விண்ணப்பதாரர்கள் முதலில் மத்திய அரசின் NATS Portal (https://nats.education.gov.in) இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து “Enrolment ID” பெற வேண்டும்.
  2. அதன் பிறகு, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத் தளமான BFSI SSC Portal வாயிலாக இறுதி விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  3. கேட்கப்பட்டுள்ள கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களைச் சரியாக நிரப்பி, ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம், சான்றிதழ்கள்) பதிவேற்றவும்.
  4. உங்கள் பிரிவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங்/டெபிட் கார்டு மூலம் செலுத்தவும்.
  5. இறுதியாக அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து (Submit), எதிர்காலத் தேவைக்காக அதனை ஒரு Print Out எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply