நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 

நேற்று மாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தழுவ முகத்துவாரப் பகுதிக்கு நீராடச் சென்ற போதே, இவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அனர்த்தத்திற்கு உள்ளாகினர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்கள், 24 வயதுடைய ஒரு இளைஞரும் அடங்குவர் உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply