ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை அன்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியானது 11 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் நடப்பு இந்தியன் பிரீமியல் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தொடக்க துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் வலுவான துடுப்பாட்டத்துடனும், ஹென்ரிச் கிளாசென் மற்றும் இஷான் […]
