அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா புதன்கிழமை (29) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அவருடன் சேர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழுவும் பதவி விலகுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ஷம்மி சில்வா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாத்தியமான வெளியேறும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, ஸ்ரீலங்கா […]
