மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை! – Athavan News

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்​தல் பிரச்சா​ரம் நேற்​றுடன் முடிவடைந்​தது.

அங்கு 142 தொகு​தி​களில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்ளது.

நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய 4 மாநிலங்​கள், புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​ கணிப்​பு​கள்​ வெளியாகின்​றன.

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேற்கு வங்கத்தில் மொத்​தம் 294 தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 152 தொகு​தி​களுக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது.

முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகு​தி​களில் நாளை இறுதிக்கட்ட தேர்​தல் நடை​பெறவுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, மொத்தம் 41,001 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்​நிலை​யில் அங்கு இறு​திக்​கட்ட தேர்தல் பிரச்​சா​ரம் நேற்​றுடன் நிறைவு பெற்​றது.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

 

நன்றி

Leave a Reply