ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு லான்ஷியரின் உட்டிங்ஸ்டன் பகுதியில் உள்ள போத்வெல் வீதியில் (Bothwell Road) அமைந்துள்ள கார் கேரேஜ் ஒன்றில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் தீவிரத்தினால் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததுடன், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். […]
