சிறப்பு பொலிஸ் சோதனையில் 748 பேர் க‍ைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (03) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 25,870…

ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDஇல் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகவும், மூத்த உதவியாளராகவும் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா, வெளிநாட்டு பயணத்திற்கான நிதியைப் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று (04) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்துள்ளார். நன்றி

ஆறு மாத ஊழல் தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் மற்றும் குடும்பத்தினர் உட்பட 29 பேர் கைது

இலங்கையின் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC), கடந்த ஆறு மாதங்களில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உட்பட 29 நபர்களை கைது செய்துள்ளது. லஞ்சம், சட்டவிரோத சொத்து குவிப்பு மற்றும்…

கிடாய் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான், வள்ளி தெய்வானை கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர் The post கிடாய் வாகனத்தில்…

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு தேவை, அவர் பொழுதுபோக்கை அனுபவிக்க வேண்டும்

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு தேவை, அதே நேரத்தில் அவர் பொழுதுபோக்கை அனுபவிக்க வேண்டும் என்று எஸ்.எம். மரிக்கார் Mp இன்று தெரிவித்தார்.  “ஜனாதிபதிக்கு போதுமான பாதுகாப்பு தேவை, அதே நேரத்தில் சில நேரங்களில் அவருக்கு பொழுதுபோக்கு தேவை. ஒரு ஜனாதிபதி தனது பணியைச்…

அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சலுகை சிறந்தது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் இலங்கைக்கான வரி விகிதாசாரத்தை 20 %வரை குறைத்திருப்பது எமது நாடு முகம் கொடுத்திருந்த சவாலை கருத்தில் கொள்கையில் குறிப்பிடத்தக்க சலுகையாக கருதினாலும் எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் பொருள் ஏற்றுமதியின் போது ஆசிய நாடுகள்…

நாட்டிற்கு வரும் வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள்

நாட்டிற்கு வரும் வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் – Jaffna Muslim நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில்…

நுவரெலியாவில் இ.தொ.கா பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அத்துடன், இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது. சந்திப்பில், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன்…

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை…

செம்மணியில் மேலும் 03 எழும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03.07.25), புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து…