உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து ஹவேலிய பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார்…

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.  ரோஹித அபேகுணவர்தனவின் (Mp) பிறந்தநாள் நிகழ்வு நேற்று களுத்துறையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி இந்தக்…

சஷீந்திர ராஜபக்சவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டது!

59 இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!

சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டிக்கொண்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (21) காலை அத்திமலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்திமலை பொலிஸ் குழு ஒன்று…

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில்…

நான் முஸ்லிம்களிடம் ஒன்றைக் கேட்க விரும்பின்றேன்…

-பாறுக் ஷிஹான்- நான் முஸ்லிம்களிடம் ஒன்றைக் கேட்க விரும்பின்றேன். தோழர் அநுரகுமார அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி ஆகிவிட்டது. இப்போது முஸ்லிமாக இருப்பதினால் ஏதாவது இடையூறு உள்ளதா..? நெஞ்சைத் தொட்டு கேளுங்கள். பள்ளிவாசலுக்கு சென்று அல்லாஹ்விடம் கேளுங்கள். ரமழான் மாதத்தில்…

 வடக்கு – கிழக்கு தேர்தலை நடத்துங்கள்!

  தற்போதைய அரசாங்கம் மாகாண சபை முறை (21.09.25) மைக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள் எனவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழில் இன்றைய…

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்

இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக…

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு மோல்டா நாட்டு 18 வயதான பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெத்தம்பெட்டமைனும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு – Athavan News மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக…