அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா Mp தெரிவித்துள்ளார்.
தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த நிதி “பாதுகாப்பாக” இருப்பதாகக் கூறுவதை கடுமையாக சாடியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிதியங்களைத் தவிர ஏனைய பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இந்த ‘நிதியம்’ நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக உருவாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

