அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, கடந்த 8ஆம் திகதி முதல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு அவர் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 9ஆம் திகதி இலங்கைக்கு திரும்பினார்.

அதன் பின்னரும், ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி ஓய்வில் இருந்து வந்தார்.

தற்போது உடல்நலம் மேம்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

நன்றி

Leave a Reply