பிரபாகரனின் மகன் ஏன் பாதுகாக்கப்படவில்லை? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பகிரங்கக் கேள்வி:

 
ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீர மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் ஆகியோரின் பிள்ளைகள் அரசினால் பாதுகாக்கப்படும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஏன் அவ்வாறு பாதுகாக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் உணர்வுபூர்வமான கருத்தை முன்வைத்து பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், கடந்த காலங்களில் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்ட தலைவர்களின் பிள்ளைகள் (விஜேவீர மற்றும் சஹ்ரான் ஆகியோரின் பிள்ளைகள்) அரச காவலில் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆனால், 12 வயது சிறுவனான பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அரசியல் ரீதியாகவோ வன்முறைகளுடனோ எவ்விதத் தொடர்புமற்ற சிறுவனான பாலச்சந்திரன் பிரபாகரன் மாத்திரம் இறுதிப் போரின் போது சரணடைந்த நிலையில், கொடூரமாகக் கொல்லப்பட்டதன் பின்னணியில் உள்ள நியாயமின்மையை அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

The post பிரபாகரனின் மகன் ஏன் பாதுகாக்கப்படவில்லை? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பகிரங்கக் கேள்வி: appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply