டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கின் நபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(27) அதிகாலை குறித்த சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற சநபரை கைது செய்ய சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார்மக்களைக் கேட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

