இலங்கை பொலிஸாரின் அறிவித்தல் – Jaffna Muslim

இலங்கையில் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

வாடகைக்கு விடப்பட்ட அல்லது குத்தகைக்கு விடப்படும் தங்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் அல்லது அவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத அல்லது சமூக விரோதச் செயல்கள் குறித்து உங்களுக்கு தகவல் கிடைத்தால், உடனடியாக 119, 118 என்ற தொலைபேசி எண்களில் இலங்கை பொலிஸ் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கினறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply