தென்னிந்தியாவில் கொடூர வெப்ப அலை! ஆந்திரா – தெலுங்கானாவில் 37 பேர் உயிரிழப்பு… – Lanka Truth | தமிழ்

ஆந்திரா மற்றும் தெங்கானா மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானாவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் Ponguleti Srinivasa Reddy தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆந்திரப் பிரதேசத்தில் வெப்பத்தாக்கத்தால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் வெப்பநிலை காரணமாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு இரு மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.


0

நன்றி

Leave a Reply