இந்திய துணைத் தலைவர் இலங்கை வருகிறாா்

இந்தியா நாட்டின் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், 2026 ஏப்ரல் 19 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய துணைத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம்  இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இலங்கை “Vision MAHASAGAR” மற்றும் “Neighbourhood First Policy” ஆகியவற்றில் முக்கிய கூட்டாளியாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து நடைபெறும் இந்த பயணம் , இரு நாடுகளுக்கிடையேயான பல நூற்றாண்டு பழமையான மக்கள்-to-மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply