ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை – Sri Lanka Tamil News

விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (03) பிறப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மை நிலைகளை வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு சட்ட மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளும் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெறவுள்ளன.

நன்றி

Leave a Reply