44
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சோகமான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சுழிபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் இன்று தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கியதில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, தற்போது சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
#JaffnaNews #LightningStrike #Chulipuram #AccidentalDeath #WeatherUpdateSL
